நீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? இராணுவ தளபதியின் அறிவிப்பு


வார இறுதி நாள்களில் நீண்ட விடுமுறை உள்ள போதிலும் நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை கொரோனா தொற்றின் மற்றொரு கொத்தணியை வரவிருக்கும் வார இறுதி விடுமுறை நாட்கள் தீர்க்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும் வார இறுதி நாள்களில் நீண்ட விடுமுறை உள்ள நிலையில் அத்தியாவசியம் இன்றி பயங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அச்சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: