அலட்சியமாக செயற்பட்டால் பேரழிவு தரும் சூழ்நிலையில் முடிவடையும் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை
சுகாதார வழிகாட்டுதல்களின் தளர்வு என்பது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்கானது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
நாட்டை காலவரையின்றி மூடி வைப்பதனால் எவ்வித பயனும் இருக்காது என சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு உரிய முறையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை சாதகமாக எண்ணி மக்கள் அலட்சியத்துடன் செயற்பட்டால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனவே, சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செய்ய தவறினால் அது பேரழிவு தரும் சூழ்நிலையில் முடிவடையும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார். (DM)
