மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் வெளிப்படைத்தன்மை கையாளும் - அமைச்சர் தினேஷ்


மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்படும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.


வெளிவிவகார அமைச்சில் சிவில் அமைப்பினர் மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டாளர்களுடன்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.


மேலும் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அதற்கான கருத்துக்களை முன்வைக்க அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


பயங்கரவாத தடுப்பு சட்டம் குறித்து சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையான பிழையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments: