இரு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை - சுகாதார மேம்பாட்டு பணியகம்


தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஜ்சித் தெரிவித்துள்ளார்.


இரு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


நாட்டில் படிப்படியாக சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் நிலைமையை கருத்திற்கு கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தளர்த்தப்படுவது அல்லது நீடிக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.


நாட்டில் டெல்டா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: