தடுப்பூசி நடவடிக்கைக்கு பின்னர் நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் - பசில் வலியுறுத்து


பொருளாதாரத்தை மீட்டெடுக்க தடுப்பூசி நடவடிக்கைக்கு பின்னர் நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார் என அரசாங்கமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


அண்மையில் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.


இதன்போது நாட்டின் உற்பத்தித் தளத்தை புத்துயிர் பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிட்டால் பொருளாதாரத்தை கொண்டு செல்லத் தேவையான பணம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்தினால் நெருக்கடி நிலைமை அதிகரித்து வேலையின்மை மற்றும் வறுமை அதிகரிக்கும் என்றும் பசில் ராஜபக் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டினை முழுமையாக திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேநேரம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: