நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் விமல்


இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பது தொடர்பான தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான விவகாரத்தில் தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியதாகவும் அந்த நிலைப்பாடு மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.


பசில் ராஜபக்ஷவோ அல்லது வேறு எந்த உறுப்பினர்களோ நாடாளுமன்றதிற்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


இதேவேளை பொருளாதார சவால்களை அவரால் சமாளிக்க முடியுமா என்று தமக்கு தெரியாது என்றும் அவரால் அவ்வாறு செய்ய முடிந்தால், அது இன்றியமையாததாக இருக்கும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

No comments: