சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு - ஒருவர் காயம்: விசாரணைகள் தீவிரம்


யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


நேற்று சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில், ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


இதன்போது அங்கிருந்த வேறு ஒரு நபர், ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவரை வாளால் வெட்டியுள்ளார்.


குறித்த சம்பவத்தினால் காயமடைந்தவர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


மேலும் சந்தேகநபர் பயன்படுத்திய வாளை மீட்ட ஆலய நிர்வாகத்தினர், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.


இந்நிலையில் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியினைச் சேர்ந்தவர் மீது முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments: