அரசியல் தீர்வு விடயத்தை முதன்மைப்படுத்தி எதிர்காலத்தில் செயற்படுவோம் - அமெரிக்க தூதுவர்


தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தை இனிவரும் காலங்களில் முதன்மைப்படுத்தி செயற்படவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவிற்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.


இதன்போது அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் அளித்த உத்தரவாதங்கள் உட்பட பல பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை புறக்கணித்து இலங்கை அரசாங்கம் பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக அமெரிக்கத் தூதுவர், கூட்டமைப்பிடம் இதன்போது தெரிவித்தார்.


ஆகவே போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வந்தமை போன்று எதிர்காலத்தில் அரசியல் தீர்வு விடயத்தையும் முதன்மைப்படுத்த எண்ணி இருப்பதாக அலைனா பி டெப்லிட்ஸ் மேலும் கூறியுள்ளார்.

No comments: