புதிய கொரோனா பிறழ்வுகள் பரவக்கூடிய இடமாகாக கொழும்பு மாவட்டம்


கொரோனா தொற்றின புதிய பிறழ்வு பரவக்கூடிய இடமாக கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புதிய வகை கொரோனா தொற்று உறுதியான 14 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அவர்களின் மாதிரிகள் தற்போது சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.


அவர்கள் தொடர்பான அறிக்கை கிடைக்கும்வரை அனைவரும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


டெல்டா மாறுபாட்டுடன் கண்டறியப்பட்ட 20 பேரில் பெரும்பாலான நோயாளிகள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.


கொழும்பு, யாழ்ப்பாணம், கிலினோச்சி போன்ற பகுதிகளிலும் தற்போது டெல்டா மாறுபாடு பரவியுள்ள நிலையில் நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த டெல்டா மாறுபாடு நோயாளிகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

No comments: