யாழ் உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு


யாழ்ப்பாணம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.


இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   நாரந்தனை வடமேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், புத்தளம் மாவட்டம், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட J P வீதி, ஒன்பதாவது வீதி கிராம உத்தியோகத்தர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: