யாழில் அடையாளம் காணப்பட்ட வன்முறைக்கும்பல்: தாவடியில் சிக்கிய ஆயுதங்கள்
யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாவடி - தோட்டவெளி பகுதியில் இன்று அதிகாலை குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களைத் தேடிச் சென்ற போதே இந்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
