15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் இடைநீக்கம்


மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தலைவர் லலித் எதிரிசிங்க, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


கடுமையான குற்றம் ஒன்றில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து லலித் எதிரிசிங்க, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்  சாகரா கரியவாசம் கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.


கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை இணையம் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த வழக்கில் லலித் எதிரிசிங்க உட்பட இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: