விடுதலைப் புலிகள் குறித்து தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டு: திருகோணமலையில் இளைஞன் கைது


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரை பேஸ்புக் குழுக்கள் மற்றும் வட்ஸ்அப் குழுக்கள் வழியாக ஊக்குவிக்கும் வகையில் குறித்த இளைஞன் செயற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் (ஐ.சி.சி.பி.ஆர்.) குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


சந்தேகநபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments: