யாழ். பல்கலைக்கழகத்தை உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் கோரிக்கை


துணைவேந்தர் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காததால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடுமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உயர்கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.


இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பங்கேற்புடன் மாணவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியே உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


குறித்த கடிதத்தின் பிரதிகள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன


இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னர் துணைவேந்தருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: