பசிலையும் ஜனாதிபதியையும் சந்திக்கின்றது சுதந்திரக் கட்சி


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர்கள் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.


சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


இதனை அடுத்து குறித்த சந்திப்புக்குப் பின்னர், சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர்கள் பசில் ராஜபக்ஷவை  சந்தித்துக் கலலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இருப்பினும் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரை சந்திப்பதற்கான காரணங்களை இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: