யாழ். இணுவிலில் தம்பதியினர் மீது வாள் வெட்டு - இருவர் வைத்தியசாலையில்


யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்துள்ளனர்.


மகனைத் தேடி வந்த நிலையில் கும்பல் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு தப்பித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: