செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படும் - இராணுவ தளபதி


பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படும் என  எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


சிங்கள தொலைக்காட்சியில் இன்று இடம்பெற்ற  விசேட நிகழ்ச்சியிலேயே சவேந்திர சில்வா மேற்கண்டவாறு கூறினார்.


இதேவேளை முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு வெளிநாட்டு பயணிகளுக்காக நாட்டை திறக்கவும் எதிர்பாத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.


முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: