18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - அரசாங்கம்


இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


கொரோனா தொற்றின் பரவலை குறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.


அதன்படி, இந்த நடவடிக்கைக்காக 09 மில்லியன் டோஸ் சினோபார்ம் மற்றும் 14 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பத்தில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஒகஸ்ட் 09 ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை 19.49 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

No comments: