யுத்தக் காலத்தில் வெளிநாடு சென்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - நாமல்


யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கை அகதிகளுக்கு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசேட அறிவிப்புக்களை வெளியிட்டுள்ள நிலையில் அதனை வரவேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை கூறினார்.


இதேவேளை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழகத்திற்கு சென்றவர்களை மீண்டும் வரவேற்றது. புள்ளிவிவரங்களின்படி, 3,567 குடும்பங்கள் யுஎன்எச்ஆர்சி உதவியுடன் தயக்கம் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.


அவற்று நாடு திரும்பியவர்களுக்கு நாடு வாழ்வாதார உதவி மற்றும் வீடு என்பன வழங்கப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில் இலங்கைக்கு மீண்டும் வருகைதரும் அகதிகளின் பாதுகாப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதி செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: