இராணுவ தளபதி பொதுமக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை


நேற்று முதல் அமுலுக்கு வந்த 10 நாள் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்தியாவசிய சேவைகள் வளமை போன்று செயற்படும் இருப்பினும் நிறுவங்கள் யாரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்பதை அந்தந்த நிறுவன தலைவர்கள் தீர்மானிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


நாட்டின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ள நிலையில் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வங்கிகள் உட்பட மற்ற அனைத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மேலும் இந்த 10 நாட்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


இதற்கிடையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: