கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு - மக்களே அவதானம்


னிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.


குறித்த பணிப்புரையினை பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) விடுத்துள்ளார்.


இன்று இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 04 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.


கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல், இதுவரை முக்கவசம், சமூக விலகல், பயணக் கட்டுப்பாடடை பொறுப்படுத்தாமல் நடந்த 55,656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: