அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு -அரசாங்கம்


அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கான தீர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்நிலையில் சம்பள முரண்பாடுப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்காததால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதே இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த விவகாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு நேற்று தனது அறிக்கையை சமர்ப்பித்த போதிலும், அமைச்சரவை எவ்வித முடிவு எடுக்கவில்லை என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசின்ஹ தெரிவித்துள்ளார்.

No comments: