அனைத்து பேருந்து மற்றும் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தம்


தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பேருந்து மற்றும் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் 08 ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில் ஈடுபடுமென புகையிரத திணைக்களம் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இருப்பினும் வழமையான பயணிகள் போக்குவரத்துக்காக ரயில்கள் சேவையில் ஈடுபடாதென அவர் இதன்போது கூறியுள்ளார்.


இதனிடையே, சுகாதாரத் துறையினருக்காக விசேட பேருந்து போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.


அத்துடன் துறைமுகங்கள் மற்றும் சுங்கம் உள்ளிட்டவற்றில் தொழில் புரியும் ஊழியர்களுக்காகவும் சில பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

(No public transport will be available during the nationwide lockdown period)

No comments: