அமைச்சர் பதவி மாற்றப்பட்டு ஒரு வாரத்தில் மக்கள் மீது விழுந்த மற்றுமொரு அடி.....மருந்துகளின் விலை அதிகரிப்பு !


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதன்படி நீரிழிவு, உயர் குறுதி அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 அத்தியாவசிய உள்ளிட்ட மருந்துகளின் விலையை 10 % அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.


குறித்த விலை அதிகரிப்பு நேற்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளது.


புதிதாக சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல பொறுப்பேற்று ஒருவார காலத்திற்குள்ளேயே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: