வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றினால் மரணம்


கொரோனா தொற்று காரணமாக 76  வயதுடைய வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா இன்று (11) காலை உயிரிழந்தார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நிலை பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனை அடுத்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.


கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்த ராசா அறிவித்த போதும் தமிழரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: