அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாப்பதே சகலரதும் பிரதான பொறுப்பு - சஜித் பிரேமதாச


கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாப்பதே சகலரதும் பிரதான பொறுப்பு என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


மக்களை பாதுகாத்த பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


தற்போது நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் போலியான தரவுகளை மக்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பி ஓடக் கூடாது என குறிப்பிட்ட அவர் இந்த பேரழிவை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.


மேலும் தடுப்பூசிகளை துரிதமாக பெற்று இதுவரையில் தடுப்பூசி வழங்கப்படாதோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

No comments: