முடக்கம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளே தீர்மானிக்கின்றனர் - ஹேமந்த ஹேரத்


கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு மருத்துவ நிபுணர்கள் சிலர் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.


எனினும் ஒரு சில தரப்பினர் முடக்கத்திற்கு செல்வதால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.


இவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் முடக்கம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளே தீர்மானிப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள், மருத்துவ சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றால் பல எதிர்வுகூறல் அறிக்கைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


மேலும் இவ்வாறான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ள ஒரு சில தரப்பினர் நாட்டை முடக்காமல் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

No comments: