பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை: இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!!


செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொதுமக்கள் தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.


அதன்படி தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்த மூலம் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கிடையில், நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


அதன்படி, மாகாணங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.


மேலும் சுகாதாரம், ஆடை, வங்கி, விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை போன்ற அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கே விசேட அனுமதி வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.


இதேவேளை முகக்கவசம் அணியாதோர் தொடர்பாக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது


இதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்தார்.


அத்துடன், இது தொடர்பாக அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் முகக்கவசம் சரியான முறையில் அணியாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எனவே வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வெளியேறுமாறு அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

No comments: