Wednesday, August 11, 2021

வவுனியாவில் 19 வயதுடைய இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!!!


வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பெண்ணை இன்று (11) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.


இதன்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் உயிரிழந்தவர் மோகன் திலக்சனா (வயது19) என்ற பெண் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.