கைக்குண்டு வைத்திருந்த விவகாரம்: முன்னாள் போராளி கைது


களுவாஞ்சிக்குடியில் கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச்சென்ற முன்னாள் போராளி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


அம்பாறை திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றினை எடுத்துச் சென்ற வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: