முடக்கமா? இல்லையா? நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் ஜனாதிபதி !!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதன்படி, ஜனாதிபதி உரையாற்றும் திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.


இதன்போது நாடளாவிய ரீதியில் பொது முடக்கம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: