நாட்டை முடக்கினால் அரச, தனியார் ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் குறைப்பு - ஜனாதிபதிக்கு ஆலோசனை


நாட்டை முடக்கினால் அரச ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி எடுக்கக்கூடிய பல நடவடிக்கை தொடர்பான யோசனையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.


அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதமும் சுகாதார ஊழியர்கள் தவிர்ந்த அரச, தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் சிற்றூழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் நன்கொடையாக வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா தொற்று பரவுவதை முன்னிட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ற தலைப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் அவரால் இந்த முன்மொழிவு செய்யப்பட்டது.


சரியான நோக்கமின்றி மற்றும் எதிர்காலத்திற்கான பார்வை இல்லாமல் தொற்றைக் கையாளும் எதிர்க்கட்சி, தொற்றுநோய் என்ற போர்வையில் அதிகாரத்தைப் பெற காத்திருக்கிறது என்றும் அக்கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.


மேலும் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில், உயிர்களின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், சுகாதார ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சிகளினால் பல போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.


No comments: