நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை?? - அமைச்சர் விளக்கம்


நாட்டில் தற்போது எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


எரிபொருள் பற்றாக்குறை இருந்தால் அதனை முன்கூட்டியே அம்மக்களுக்கு தெரிவித்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.


எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தேசிய பெற்றோல் ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், நாட்டில் எதிர்வரும் 11 நாட்களுக்கு போதுமான டீசல் மாத்திரமே காணப்படுவதாகவும் 10 நாட்களுக்கு போதுமான அளவு பெற்றோலே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: