தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு 14 நாட்களுக்கு மேல் நீடிக்காது - திலும் அமுனுகம


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு 14 நாட்களுக்கு மேல் நீடிக்காது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


ஆகவே 10 நாட்களை கணக்குவைத்தே குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முடக்க கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டதால் முன்னர் மாதந்தோறும் 5,000 வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.


2,000 ரூபாய் அல்லது 5,000 ரூபாய் கொடுப்பனவு போதுமானதாக இருக்காது என்றாலும், தற்போது காணப்படும் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியிலும் மக்களின் நலனுக்காக இந்த முடிவு எட்டப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.

No comments: