அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு


அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.


அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க அரச தரப்பு உறுப்பினரும் முன்மொழியவில்லை என்றும் கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.


இருப்பினும் அரச, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்தவித தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் இந்த விடயம் தொடர்பாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.


ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமையானது அரசாங்க ஊழியர்களின் சம்பள குறைப்புக்கான முயற்சியல்ல என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.


இதேவேளை அவ்வாறு பலவந்தமாக அந்த நிதியத்திற்கு நிதி பெற்றுக்கொள்ளவதற்கான தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

No comments: