மாமாங்கம் கோயிலில் பெருந்திரளான மக்கள் கூடிய விவகாரம்: ஆலயத்தின் அறங்காவலர்கள் பிணையில் விடுதலை


மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அறங்காவலர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாமாங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிதிர்க்கடன் தீர்க்கும் வழிபாட்டு நிகழ்வு நேற்று நடாத்தப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.


அதன் அடிப்படையில் ஆலயத்தின் 5 அறங்காவலர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த ஐவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தலா 25,000 ரூபாய் ரொக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: