18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி - அரசாங்கம்


இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அமைச்சர் இதனை தெரிவித்தார்.


18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


அதன்பிரகாரம் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments: