சிறையில் ரிஷாட் கொலை மிரட்டல் - மருத்துவர் பொலிஸில் முறைப்பாடு!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறைச்சாலை மருத்துவர் ஒருவர் முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.


இது குறித்து பொரளை பொலிஸ் நிலையத்தில் குறித்த மருத்துவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அறிவித்தியுள்ளார்.


கடந்த 15 ஆம் திகதி மற்றுமொரு கைதியை பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளை ரிஷாட் பதியுதீன் வலுக்கட்டாயமாக வந்து கொலை மிரட்டல் விடுத்தார் என குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.


பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவர் சிறைச்சாலை தலைமை மருத்துவர் மற்றும் சிறையின் உயர் அதிகாரிகளிடம் இதனை தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை சிறைச்சாலை ஆணையாளரால் எழுத்து மூலமான முறைப்பாடு பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர், அவரது உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


மேலும் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று மதியம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மருத்துவர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: