மேலும் 10 நாட்களுக்கு முடக்கத்தை நீடிக்கவும் - நிபுணர்கள் பரிந்துரை


இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அக்கட்சியின் செயலாளர், டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.


"நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்புகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் இடவசதி மற்றும் வைரஸின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகளின் காலம் தீர்மானிக்கப்பட வேண்டும்


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் தீர்வு அல்ல, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் விரைந்திருப்பதே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணம்.


தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மூன்று வாரங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இந்நிலையில் மேலும் 10 நாட்கள் முடக்கத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

No comments: