அரச தனியார் துறை ஊழியர்களின் சம்பள குறைப்பு விவகாரம்: பொதுமக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்கின்றார் பந்துல


அரச தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்தவித தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75%, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் 50% மற்றும் சிறு தொழிலாளர்களின் சம்பளத்தில் 30% நன்கொடையாக வழங்க வேண்டும் என கோரி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.


இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன, கடினமான சூழ்நிலையில் நாட்டை உயர்த்துவதற்கு பொதுமக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என கூறியுள்ளார்.

No comments: