ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்பவர்களுக்கான அனுமதிப்பத்திரம் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு


ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரங்களும் தங்களினால் வழங்கப்படாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இதனை தெரிவித்தார்.


வணிகம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை சம்பந்தப்பட்ட பிபிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.


இதேநேரம் ஏற்கனவே அனுமதிப்பத்திரங்கங்களை பெற்றிருந்தால் அதனை புதுப்பிக்கலாம் என்றும் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

No comments: