நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி!!


எதிர்க்கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி செய்வதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன குற்றம் சாட்டினார்.


எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கை பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்யும் ஆடைத் தொழிலை வீழ்ச்சியடைய வைத்துள்ளது என்றும் கூறினார்.


இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்றுமதியில் அதிக வருவாயை ஈட்டும் ஆடைத்துறை ஊழியர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பலம் என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments: