ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்


ஓய்வூதிய திணைக்களத்தின் சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.


நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், சேவைகளை பெற விரும்புவோர் 1970 என்ற இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: