அதிரடியாக அதிகரித்தது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை...!


பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.


அதன்படி பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இந்த விலை உயர்வு நடைமுறைக்குவரும் என அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: