வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு முடக்கம் ??


நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.


இலங்கையின் தற்போது டெல்டா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதுடன் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


இந்நிலையில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நாளை நள்ளிரவு முதல் நாட்டை இரு வாரங்களுக்கு முழுமையாக முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: