ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குங்கள் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!


ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொரோனா தொற்று பரவலானது நாடு முழுவதும் ஒரு பேரழிவு சூழ்நிலையை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எனவே, ஒரு வாரத்திற்கு முடக்கம் இருக்கும் போது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.No comments: