இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் உயிரிழந்தவர் 11 வயதான டில்மினி என்ற பாடசாலை மாணவி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல்கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த சிறுமி நேற்றைய தினம், அறையின் கதவுகளை அடைத்து தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவரது தாயார் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, மிக நீண்டநேரம் வெளியில் வராததை அடுத்து, தாய் வீட்டின் யன்னல் ஊடாக பார்த்தபோது, சிறுமி தொட்டில் புடவையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அதன்பின்னர் சிறுமியின் சகோதரனை யன்னல் வழியாக அறைக்குள் அனுப்பி, கதவை திறந்து, சிறுமியை தெரணியகல வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். எனினும் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
