வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவரும் உயிரிழப்பு -இறப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்வு


வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சாரதி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (08) உயிரிழந்தார்.


இதனை அடுத்து குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் உயிரிழந்ததுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: