பி.சி.ஆர். பரிசோதனைக்கு 40 டொலர் கட்டணம்.. 3 மணித்தியாலங்களில் முடிவு


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று (25) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர்.சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


விரைந்து பி.சி.ஆர். பெறுபேற்றை பெற்று கொடுக்கும் நோக்கில் குறித்த மத்திய நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இன்று முதல் இதனூடாக பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சோதனைகளின் முடிவுகள் மூன்று மணி நேரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், அதே நேரத்தில் ஆய்வகம் ஊடக 500 பி.சி.ஆர். பரிசோதனைகளை ஒரு மணி நேரத்திற்குள்ளும் 7,000 சோதனைகள் நளந்தமும் நடத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பரிசோதனைகளுக்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து 40 டொலர் கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை எனில், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் எவ்வித தனிமைப்படுத்தலும் இன்றிநாட்டிற்குள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments: