அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் ஒப்பந்தம்: ஜனாதிபதியுடன் கலந்துரையாட பங்காளி கட்சிகள் முடிவு


கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை நடத்த பங்காளி கட்சிகள் தீர்மானித்துள்ளன.


கூட்டணியில் உள்ள 11 கட்சிகளின் தலைவர்களின் கையொப்பங்களுடன் எழுத்து மூலமாக கோரிக்கை வைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச நம்பிக்கை வெளியிட்டார்.


கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (23) மாலை அலரிமாளிகையில் கலந்துரையாடல் நடைபெற்றது.


இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வீரவன்ச, தங்களின் கவலையை இதன்போது முன்வைத்தாகவும் நிதி அமைச்சரும் தனது கருத்துக்களை தெரிவித்ததாக அவர் கூறினார்.


மாறுபட்ட கருத்துகளின் காரணமாக, சுமார் 10-11 கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்க கடிதம் மூலம் அழைப்பு விடுப்பார்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

No comments: